Saturday, April 27, 2024

ராஷ்மிகா பிறந்தநாளையொட்டி வெளியான அவரின் புஷ்பா 2 காதபாத்திர போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா 2 படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டாராக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா திரைப்படத்தில் அவரது புஷ்பா ரோல் ரசிகர்களிடம் மிகப்பெரிய பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது மீண்டும் புஷ்பா 2ல் நடித்திருக்கும் புஷ்பா: தி ரூல் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரைக்கு வரத் தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக ரசிகர்களுக்கு நிச்சயம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் அசத்திருந்த ராஷ்மிகா மந்தானா மீண்டும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களை கவர வருகிறார்.முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.

வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்தநாளான்று அன்று புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்ய, எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். திறமையான படக்குழுவின் உழைப்பால் வெளிவர தயாராகி கொண்டு இருக்கிறது புஷ்பா 2.

இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் நகைகள் அணிந்து, கையை கண்ணுக்கு அருகில் வைத்து போஸ் கொடுத்தபடி நின்றுகொண்டிருக்கிறார் ராஷ்மிகா முன்னதாக தனது கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா என் கேரக்டரான ஸ்ரீவள்ளி ‘புஷ்பா’வுக்கு மனைவி ஆகிவிட்டதால் இன்னும் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. இதில் அதிகமான டிராமாவும் மோதல்களும் இருக்கின்றன” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News