Friday, April 26, 2024

ராஷ்மிகாவுடன் தனுஷ் ரொமான்ஸ்… விறுவிறுப்பாக நடக்கும் குபேரா ஷூட்டிங்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் இடைவேளையின்றி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுஷ், ராயன், நிலுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் இயக்கி நடிகராகவும் நடித்துள்ளார்.

ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் மீண்டும் தொடங்கியது. கதைக்களம் மும்பை தாராவியை மையமாக வைத்து தனுஷ் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பான் இந்தியா படமாக அமைக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் ராஷ்மிகா மந்தாவும் நடித்துள்ளார்.நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதியில் பல முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News