Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரஜினியின் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதா? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சவுப் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத படப்பிடிப்பை மார்ச் மாதம் முழுவதும் முடிப்பதற்கான திட்டத்தை பட குழு திட்டமிட்டுள்ளது. அந்தப் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் பரவின, ஆனால் தற்போது புதிய வெளியீட்டு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் ‘கூலி’ திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் ‘கூலி’ திரைப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News