அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.முன்னதாக, துபாயில் நடைபெற்ற கார் ரேஸில், அஜித்தின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இதற்கு முன் நடந்த பயிற்சியில், அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதே நேரத்தில், அவர் எந்தக் குறையும் இல்லாமல் போட்டியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156130.png)
தற்போது, போர்ச்சுக்கலில் நடைபெற உள்ள கார் ரேஸுக்காக, அஜித்தின் “அஜித்குமார் ரேசிங்” அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையில், அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இது இரண்டாவது முறை நிகழ்ந்த விபத்து என்பதால், ரசிகர்கள் கவலையடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, அஜித்துக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், கார் மிகவும் சேதமடைந்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156941.png)
இந்த விபத்து குறித்து அஜித் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது”எங்களுக்கு மீண்டும் நல்ல நேரம் அமையப் பெற்றுள்ளது. எனது கார் சிறிய விபத்தில் சிக்கியது, ஆனால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. எங்கள் குழுவினர் விரைவாக செயல்பட்டதால், பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்கிறேன். என் மெக்கானிக் குழுவினர் காரை சரி செய்துவிட்டனர். நாங்கள் மீண்டும் சிறப்பாக திரும்பி வருவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”மேலும், அஜித் கூறியதாவது:மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்குவது சந்தோஷம் தருகிறது.”