Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பிரபாஸ்-ன் சலார் திரைப்படத்தை பார்த்த நடிகர் விஜய்… தீயாய் பரவும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம், கேரளம் என இரண்டு மாநிலங்களிலும் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம் உண்டு.அதுமட்டுமின்றி கர்நாடகாவிலும் கணிசமான அளவு ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சமீப காலங்களில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் எந்த ஒரு பொது இடத்திற்கும் விஜய்யால் போக முடியாத ஒரு சூழல் உள்ளது. அப்படி அவர் சென்றால் எண்ணற்ற ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வதால் அவர் அதிகம் வெளியில் வருவதில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து அவர் ‘சலார்’ படம் பார்த்த தகவல் வெளியாகி உள்ளது.

‘தி கோட்’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்த போது கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘சலார்’ படம் வெளியானது. அந்தப் படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு ‘மாஸ்’ தியேட்டரில் சாதாரண டிக்கெட்டில் விஜய் படம் பார்த்தார் என்ற தகவலை நடிகர் வைபவ் வெளியிட்டுள்ளார். அப்படி படம் பார்த்தால்தான் ‘வைப்’ ஆக இருக்கும் என விஜய் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது பற்றி விஜய் படம் பார்த்த சிறு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர் ஒருவர், “எர்ரகட்டா, கோகுல் 70எம்எம் தியேட்டரில் விஜய் சார் ‘சலார்’ படத்தைப் பார்த்தார் என்று சுற்றி வரும் செய்தி உண்மையானதுதான். அவரது தனிப்பட்ட உரிமைக்காக நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதை மதித்து நாங்களும் அமைதியாக இருந்தோம். அவர் படம் முடிந்து சென்ற போது எங்களைப் பார்த்து கையசைத்தார். அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது,என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News