திஷா பதானி, அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்றிருந்தார். இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நான்கு நாட்கள் பிரம்மாண்டமான கப்பலில் நடந்தது, அதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃபின் மகனும் பாலிவுட் நடிகருமான டைகர் ஷெராஃப்பை திஷா பதானி காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதை உறுதிப்படுத்திய ஜாக்கி ஷெராஃப் கூட இருவரது திருமணத்தைப் பற்றிப் பேசியிருந்தார்.

ஆனால் தற்போது திஷா பதானி டைகர் ஷெராஃப்பை மறந்து, திடீரென தனது புதிய ஆண் நண்பருடன் பழகுவதாகவும், டைகருடன் பிரேக்கப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீரென மாடல் மற்றும் நடிகர் அலெக்ஸாண்டருடன் நெருக்கமாகியுள்ள திஷா பதானி, இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இப்போது, திஷா பதானி அலெக்ஸாண்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்.




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி நடித்து வரும் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரபாஸுன் கல்கி படத்திலும் திஷா பதானி நடித்துள்ளார். இந்த மாதம் 27ம் தேதி கல்கி திரைப்படம் வெளியாக உள்ளது. தென்னிந்திய நடிகர்களுடன் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் திஷா பதானி தனது சமீபத்திய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதைக்கண்ட ரசிகர்கள் செய்வதறியாது நிறைந்துள்ளனர்.