விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி, வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் புதிய படம் “தி கோட்” (The Greatest Of All Time). செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், “தி கோட்” படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட்டுகளை எடுப்பதில் தீவிரமாக இருப்பதால், “தி கோட்” படத்தைச் சேர்ந்த புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய தேசிய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், “தி கோட்” படத்திற்கான டப்பிங் வேலை செய்துள்ளார்.
இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், “கோட் படத்தில் எனது பங்கை செய்துள்ளேன். முதன்முறையாக ஒரு படத்தில் ஒரு பங்கு வகிக்கிறேன். இது சுவாரஸ்யமாக இருக்கிறது. கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.