தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்.
சில நாட்களாக சந்தித்து வந்த உடல்நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே கேட்டு விட்டது போல. ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்.
இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி அவர் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்துள்ளதால் தற்போது விரைவில் நடிக்க உள்ளார். அதற்காக எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாகும்.