Monday, January 20, 2025

மீண்டும் தூசி‌ தட்டப்படுகிறதா சங்கமித்ரா? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க, 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. படத்தை அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு, ஸ்ருதிஹாசன் இந்த படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக திஷா பதானி நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்தும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த வருடம் தனது 50 ஆம் ஆண்டை கொண்டாட உள்ளது. அதற்காக ‘சங்கமித்ரா’ படத்தை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர் சி இப்படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் யார் நடிக்க உள்ளனர் மற்றும் படத்தில் இடம் பெறும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் சில படங்களை தயாரிக்கவும், வினியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News