“பத்ரி” மற்றும் “ஜில்லுனு ஒரு காதல்” போன்ற படங்களில் பிரபலமான பூமிகா சாவ்லா தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். “பிரதர்” மற்றும் “ஸ்கூல்” ஆகிய தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை செய்தவர், இப்போது எந்த சலசலப்பும் இல்லாமல் தனது பெயரை காப்பாற்றி வருகிறார்.


இப்போது, பூமிகா “ஸ்கூல்” என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். சரத்குமாரை வைத்து “வைத்தீஸ்வரன்” படத்தை இயக்கிய வித்யாதரன் இந்த படத்தை இயக்குகிறார். பூமிகா தனது 4 வயது மகனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தபோதும், பையனுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட, ஷூட்டிங்கில் எந்த இடையூறும் தரவில்லை என்று கூறப்படுகிறது.


பூமிகா தமிழில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு “கொலையுதிர் காலம்” படத்தில் நடித்தார். “தோனி” படத்திற்குப் பிறகு, அவருக்கு எந்த பெரிய படங்களும் கிடைக்கவில்லை. ஏற்கனவே, அவர் “யு டர்ன்” என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பூமிகா பேய் படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.