கேரளத்து இளம் அனிகா சுரேந்திரன், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில், த்ரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அதன்பின், அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்திலும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இவர், பார்ப்பதற்கு நயன்தாராவைப் போன்ற இருப்பதால், ரசிகர்கள் அவரை ‘குட்டி நயன்தாரா’ என்று அழைக்கின்றனர்.
அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அனிகா, வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பவிஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட அனிகா சுரேந்திரன், மெல்லிய சேலையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.