Tuesday, November 19, 2024

மழையை ரசித்தபடி பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நடிகை நித்யா மேனன்… ட்ரெண்ட் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2006-ஆம் ஆண்டு 7 O’ Clock என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதற்குப் பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து, தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார் நித்யா மேனன்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான காஞ்சனா – 2, ஒகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, ‘மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத் தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இதற்கு ‘டியர் எக்ஸஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார். ‘டியர் எக்ஸஸ்’ போஸ்டர் கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரில் தனது வீட்டில் ஜூலை மாத மழையை ரசித்து பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “பெங்களூரில் ஜூலை மாதத்தில் அரிதாகத்தான் வீட்டில் இருப்பேன். மரங்களுக்கும் மேகங்களுக்கும் இடையிலிருந்து வீட்டில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியானது” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News