கவிஞர் வைரமுத்து 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பின், ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.
அதுமட்டுமின்றி இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.