ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி, மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படங்களில் நடித்துவருகிறார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீனி படத்தின் முதல் லுக் மற்றும் போஸ்டர்கள் 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன, அதில் ஜெயம் ரவி அலாவுதீன் பூதம் போல தோற்றமளித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் மற்றும் வாமிகா கபி தேவதை வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள், அவர்கள் அனைவரும் அலாவுதின் பாம்பு மரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அவர்களின் கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்கும் என்பது படம் திரையிடப்பட்ட பிறகே தெரியவரும். அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவையாணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். “ஜீனி” படம் ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ளது, மற்றும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியுள்ளார். ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும் “ஜீனி”. படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.