தற்போது ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்திற்கு ‘மதராஸி’ என்ற பெயரை வைத்திருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளார். இப்படத்திற்கு இந்த தலைப்பை எதற்காக தேர்வு செய்துள்ளார் என்பது குறித்து அவர் ஒரு விளக்கம் வழங்கியுள்ளார்.
அதில், “மதராஸி” ஒரு ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படம் என்றும், குறிப்பாக ‘அமரன்’ படத்திற்குப் பிறகு, இது சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வட இந்திய மக்களால் தென்னிந்திய மக்களை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பதே கதையின் மையக்கருத்தாக இருக்கும் என்று கூறினார்.


அதனை முன்னிட்டு, வட இந்தியாவில் தென்னிந்தியரை பொதுவாக “மதராஸி” என அழைத்து வருவதால், இப்படத்திற்கும் அந்த பெயரையே தேர்வு செய்துள்ளதாக முருகதாஸ் கூறினார். மேலும், “இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு, இந்த தலைப்பு கதைக்குச் சரியாக பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.