Tuesday, November 19, 2024

‘மகாராஜா’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்-ஐ நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குரங்கு பொம்மை” படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் “மகாராஜா” திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்துள்ளது. 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் வெளியிடப்பட்டு, இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களில் முதல் இடத்தில் உள்ளது. படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில், நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன் பாராட்டினார். தற்போது படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தை, வாழும் வாழ்க்கை முறையை கோலிவுட்டின் மிகச்சிறந்த மனிதனிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டது மிகவும் ஆனந்தம்.

நீங்கள் என்னை உபசரித்த பண்பும், பணிவும் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் “மகாராஜா” திரைப்படத்தை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை தெரிந்தப்பின் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மிக்க நன்றி சார், லாங் லிவ் தலைவர்.” என்று நெகிழ்ச்சியுடம் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News