நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். 32 வயதான நிவேதா, புதிய பட வாய்ப்புகள் குறைவாக இருப்பினும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
சமீபகாலமாக, நிவேதா பெத்துராஜை பற்றிய பல வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் அனைத்தும் பொய்தான் என்று அவர் கூறியுள்ளார். துபாயில் வீடு வாங்கி யாரும் தரவில்லை என்றும் வெறும் வதந்திதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை வழிமறித்து வாகன சோதனை செய்தபோது, தனது காரை திறக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதை ஏன் வீடியோ படமாக்குகிறீர்கள் என கேமராவை ஆஃப் செய்யுமாறு கேட்டுக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், போலீஸ் உடை அணிந்திருந்தவர்கள் கிராக்ஸ் செருப்பு அணிந்திருந்ததை பார்த்து, ரசிகர்கள் இது ஒரு படத்தின் புரமோஷன் என நகைச்சுவையாக கருத்து கூறுகின்றனர். அது எந்தப் படத்திற்கான புரமோஷன் என்பது இதுவரை தெரியவில்லை. இதை விரைவில் நிவேதா பெத்துராஜ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.