Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பைக்கில் பறவையாய் பறந்த அக்ஷய் குமார் மற்றும் சுதா கொங்கரா… வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற சூரரைப் போற்றி திரைப்படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியானது நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இது அக்‌ஷய் குமார் ரசிகர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்குக்கு படக்குழு ‘சர்ஃபிரா’ என்று பெயரிட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வீடியோவில் அக்சய் குமார் பைக்கை ஓட்டி, சுதா கொங்கரா பின்னால் அமர்ந்துள்ளனர். அக்சய் குமார் தனது இரண்டு கைகளையும் பறப்பது போல் செய்ய, பின்னால் அமர்ந்திருந்த சுதா கொங்கராவும் அவ்வாறு செய்தார். 

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் சிலர், இது டைட்டானிக் படத்தின் போஸ்டரைப் போல் உள்ளது என்றும், இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஒத்துப்போகின்றது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News