அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தில், “ஊ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும், இப்படம் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் முதல் பாகத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்த பஹத் பாசிலுக்கு, இந்த இரண்டாம் பாகத்தில் மெயின் வில்லனாக அதிக முக்கியத்துவம் இயக்குனர் சுகுமார் கொடுத்துள்ளார் எனப்படுகிறது.

அதற்காக, அல்லு அர்ஜுனும் பஹத் பாசிலும் மோதும் சண்டைக் காட்சியொன்றை ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.