Monday, October 14, 2024

புதிய துவக்கம்…புதிய தோற்றம்… ஸ்டைலீஷ் லுக்கில் கலக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‛இந்தியன் 2′ படம் வெற்றியடையாமல் போனது. இப்போது, அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛தக் லைப்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமல் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். அங்கு அவர் தனது கதர் ஆடைகள் தொடர்பான தொழில் வளர்ச்சி மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

‛தக் லைப்’ படத்திற்கு பின், கமல் அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து கமலின் ஒரு புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் கமல் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அதோடு, ‛‛புதிய துவக்கம், புதிய தோற்றம், ஒரு புதிய பயணம் ஆரம்பமாகியுள்ளது…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News