Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

பிரபல கராத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிஹான் ஹூசைனி காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, ஏராளமானவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார். மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் போன்ற திரைக்கலைஞர்களுக்கும் இவர் தற்காப்பு கலை தொடர்பான பயிற்சி அளித்துள்ளார்.அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News