ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சல்மான் கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கப்போகிறாராம். ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமீப காலமாக தமிழ் படங்களை ரீமேக் செய்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சல்மான் கான்.
நடிகர் சல்மான் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹாலிவுட்டுக்கு செல்ல ஆசை இல்லை என்றும் சில நடிகர்கள் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்கிறார்கள். நான் அப்படி வேறு இண்டஸ்ட்ரிக்கு சென்று படம் செய்ய வேண்டுமென்றால் தென்னிந்தியாவுக்கு சென்று விடுவேன். அங்கே தான் நல்ல கதைகள் மற்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் உருவாகின்றன என சல்மான் கான் கூறியுள்ளார்.
சல்மான் கான் தற்போது ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், அஜித் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த சல்மான் கான் அடுத்து மாஸ்டர் பட ரீமேக்கிலும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக்கானை இயக்கிய அட்லீ அல்லு அர்ஜுனை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதிக சம்பளம் கேட்டதால், சன் பிக்சர்ஸ் தற்போது சல்மான் கானை அந்த படத்தில் நடிக்க வைக்க முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பார் என தெரிகிறது. ஷாருக்கானுக்கு ஜவான் என்கிற பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த அட்லீ சல்மான் கானுக்கும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுப்பார் என தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.