கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் அருண் சந்து இயக்கியத்தில் ககனாச்சாரி இந்த படத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையம்சத்துடன் சின்ன பட்ஜெட்டில் தரமான விஎப்எக்ஸ் பணிகளுடன் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள். வரும் ஜூலை 5ம் தேதி இந்த படம் நான்கு மொழிகளிலும் வெளியாகிறது.

