Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ள ‘மார்ட்டின்’ திரைப்படம்… வெளியான ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திரம் பிரின்ஸ் துருவா சர்ஜா நடித்துள்ள, மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் அதிரடியாக உருவாகி வரும் இந்த திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா கூறியதாவது, “‘மார்ட்டின்’ என்பது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல, அது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் வென்ச்சரை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. 

ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு, 11 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் ‘மார்ட்டின்’ திரைப்படத்தை வெளியிடவுள்ளோம்” என்றார்.

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் “மார்ட்டின்” படத்தை AP.அர்ஜுன் இயக்குகிறார். கதை மற்றும் திரைக்கதை ஆகியவற்றை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். டோலிவுட் பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், மேலும் K.G.F மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News