Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய கல்கி… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியானது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கல்கி 2898 ஏடி’ படம் முதல் நாள் பாக்ஸ் ஆஃபீசில் ரூ.96 கோடி வசூலித்துள்ளது. இப்படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் ரூ.95 கோடி இந்திய நிகர வருமானத்தை ஈட்டி உள்ளது. உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் இப்படம் ரூ.180 கோடி வசூல்செய்துள்ளது.

இந்தியாவில் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. முதல் நாளில் இந்த படத்தை 85.15 சதவீத தெலுங்கு ரசிகர்கள் பார்த்து ரசித்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News