Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி… தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90-களின் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. 1993ல் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘உழவன்’ படத்தில் அறிமுகமானார். அதற்கடுத்து சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்து வந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘அழகிய லைலா’ பாடல் அதற்குக் காரணம். சமீபத்தில் வெளிவந்த மலையாளப் படமான ‘குருவாயூர் அம்பலநடையில்’ அந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர்.

விஜய் ஜோடியாக ‘நினைத்தேன் வந்தாய்’, ‘என்றென்றும் காதல்’, ‘மின்சார கண்ணா’ ஆகிய படங்களில் நடித்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அதன்பின் சில டிவி ஷோக்களில் நடுவர் ஆகப் பணியாற்றினார் ரம்பா. அடிக்கடி சென்னை வந்து செல்வார். தற்போது சென்னை வந்துள்ள அவர் தனது கணவர், குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாழ்த்துகள்” எனப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News