நடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம் சேது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு, சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க விக்ரம் மிகவும் பாடுபட்டார். விக்ரமின் திரை பயணம் சேதுவிற்கு பின்னர் சேதுவிற்கு முன்னர் என இரண்டு பகுதிகளாக பிரித்து பார்க்க முடியும்.
தற்போது, பாலா வணங்கான் படத்தின் இயக்கத்தை முடித்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே உள்ளது. பரதேசி படத்தின் ஷூட்டிங் போது கூட குச்சியைப் பயன்படுத்தி அடிப்பது போன்ற காட்சிகள் வெளியானது. ஆனால் அது உண்மையான குச்சி அல்ல, பொய்யான குச்சி என்று பாலா விளக்கினார்.
இதற்கிடையில், வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடித்தபோது, அதில் நடித்த பிரேமலு நடிகை மமிதா பைஜுவை பாலா அடித்ததாகவும் அதனால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எழுத்தாளரும், கதையாசிரியருமான நாஞ்சில் நாடன் பாலா குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,பரதேசி படத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று நடித்தது. அந்தக் குழந்தையின் அம்மா சம்பளத்தைப் பெற்று ஷூட்டிங் இடத்தை விட்டுப் புறப்பட்டார். அவர் பத்து அடி தூரம் சென்றவுடன், பாலா அந்த அம்மாவை திரும்ப அழைத்து, தன்னிடமிருந்த சில ஆயிரம் ரூபாயை கொடுத்து, “குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். இதைக் கேட்டபோது, பாலா இத்தகைய கருணை உள்ளம் கொண்டவரா என அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது என்றுள்ளார்.