Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பருத்திவீரன் பிரச்சினை குறித்து அந்த பிரபலம் பேசாமல் இருந்தது ஏன்… இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பருத்திவீரன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த வருடம் பருத்திவீரன் விவகாரம் மீண்டும் தலைதூக்கியது. இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பலரும் பேசினர், ஆனால் சூர்யா மௌனமாக இருந்தார். இது குறித்து இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா பருத்திவீரன் விவகாரம் குறித்து பேசாமல் இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதற்கு அவரோ, விடுங்க சார் அந்த கல்லை எடுத்து நானும் எரியனுமானு பார்க்குறேன் என்று கேட்டார். அதற்கு நான், ‘இல்லை நீங்கள் சொன்னால்தானே உங்கள் தரப்பு நியாயம் என்னவென்று தெரியும்’ என்று கூறினேன். உடனே அவர்,நான், 2டி ராஜசேகர் ஆகியோர் அமர்ந்து என்ன மாதிரியான பதில் கொடுக்கலாம் என்று யோசித்து ஒரு அறிக்கையை தயார் செய்தோம். அந்த சமயத்தில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்தார். 

எனவே அந்த நேரத்தில் அதை வெளியிடுவது சரியாக இருக்காது என்று முடிவு செய்தோம். பிறகு சூர்யா என்னிடம், ‘விடுங்கள் சார்.. தாக்கப்பட்ட நான் தாக்கப்பட்டவனாகவே இருந்துவிட்டு போகிறேன்’ என்று கூறினார். அந்த பதில் மட்டும் வந்திருந்தால் சூர்யா தரப்பில் நியாயமும் வெளியே தெரியவந்திருக்கும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News