சமீபத்தில் வெளியான ‘பயர்’ படத்தில் வன்கொடுமை குற்றவாளி காசியாக நடித்த பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கும் படம் ‘ரன்னர்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பாலாஜி ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார். சிதம்பரம் ஏ.அன்பழகன் இயக்குகிறார். ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் ‘பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்க்’ படங்களை தயாரித்திருந்தது. துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், தர்ஷன் ரவி குமார் இசை அமைக்கிறார்.

