Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பயணிக்கிறவர்களுக்கு பயன் கிடைப்பதே முக்கியம்… இயக்குனர் பார்த்திபன் வைத்த குற்றச்சாட்டு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் முக்கியமான நபராகிய பார்த்திபன், பல திரைப்படங்களை இயக்கி நடித்தவர். சில மாதங்களுக்கு முன் அவர் இயக்கிய மற்றும் நடித்த “டீன்ஸ்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, குறிப்பாக சிறுவர்களின் மனதை கவர்ந்த படமாக அமைந்தது.

தற்போது, அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமாவில் மட்டுமல்ல, சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். சமீபத்தில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை கமெண்ட் செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனாக இல்லை. ஆரோக்கிய குறைகள் உள்ளன என்று சிலர் கூறினர். நான் குறை கூறும் புத்தகத்தை எடுத்து, கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.

நான் தொடர்ச்சியாக பயணம் செய்யாவிட்டாலும், பயணிக்கிறவர்களுக்கு பயன் கிடைப்பதே முக்கியம் என்று நினைக்கிறேன்…” என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News