நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய படமாக உருவானது ‘ஜெயிலர்’ திரைப்படம். உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. தற்போது, அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நெல்சன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் நெல்சன் திலீப்குமார். அங்கு பேசிய அவர், “‘வாழை’ படத்தை பார்க்க அழைப்பது ஏன்? கண்டிப்பாக படத்தை பார்த்து அழ வைப்பார்கள் என்று நான் மாரி செல்வராஜிடம் சொன்னேன். படம் அருமையாக வந்திருக்கிறது.
மாரி செல்வராஜ், படத்தில் வரும் சம்பவங்களை அவர் அனுபவித்தவாறு காட்சிப்படுத்தியுள்ளார். இது அவரது சுயசரிதை. சில நகைச்சுவையும் அதேசமயம் மிகவும் எமோஷனலாகவும் இப்படம் இருக்கிறது என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.