விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய 50-வது திரைப்படம் “மகாராஜா.” குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தனது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மகாராஜா’ ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஜா பட இயக்குனர் சாமிநாதனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உன்னுடன் சேர்ந்து படம் பண்ணதில் எனக்கு பெரும் சந்தோஷம். படம் எடுத்து கொண்டிருக்கும்போதே சொன்னேன் படம் வெளியானதும் இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுவோம் என்று கூறி, “I Love You” என்று இயக்குனருக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.