Tuesday, January 21, 2025

நிவின் பாலி சூரி அஞ்சலி நடிப்பில் இயக்குனர் ராம்-ன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை பட ட்ரெய்லர் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம் தற்போது “ஏழு கடல் ஏழு மழை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களத்துடன் படங்களை இயக்கும் இயக்குநர்களில் ராம் ஒரு முக்கியமானவர். அவரின் திரைப்படங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். பொதுவாக, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு படங்களை இயக்குவது ராமின் சிறப்பு.

“ஏழு கடல் ஏழு மழை” திரைப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றது. சர்வதேச பார்வையாளர்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் சில பாடல்களும் டீசரும் சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டன. தற்போது, படக்குழுவால் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் காட்சிகள் மிகவும் வித்தியாசமாகவும், ஃபேண்டஸி அம்சங்களுடன் திரில்லராக அமைந்துள்ளன. குறிப்பாக, ஒரு ரயில் காட்சியில், சூரி, நிவின் பாலி, அஞ்சலி மற்றும் எலி ஆகியவை உள்ள கதாபாத்திரங்கள் மிகவும் தனித்துவமாக அமைந்துள்ளன. திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News