மலையாள நடிகை வித்யா பிரதீப், 2010ம் ஆண்டில் ஜெய் நடித்த “அவள் பெயர் தமிழரசி” படத்தில் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களால் ஒரு டான்சர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர், “விருந்தாளி” படத்தில் ஹீரோயினாக நடித்த அவர், தொடர்ந்து “சைவம்”, “பசங்க 2”, “தடம்” உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி சதீஷ் நடிப்பில் வெளியான “சட்டம் என் கையில்” படத்தில், வித்யா பிரதீப் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, தனது திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளேன் என்ற தகவலை புகைப்படத்துடன் வித்யா பிரதீப் அறிவித்துள்ளார்.
இதனால், திருமணம் செய்துகொண்ட பிறகும் இதுவரை அதை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடித்து வந்தது எனும் தகவலும் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.