Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நாளை வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் மிகப்பெரிய அப்டேட்! #VJS50

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக உருவாகியுள்ளது ‘மகாராஜா’ படம். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது.இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளனர்.அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் இருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.

அதேசமயம் இந்த படம் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசும் என கூறப்படுகிறது.இந்நிலையில் தற்பொழுது படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.அதில் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News