எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேபோல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

சமீப காலமாக அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. ஆனால் அவர் மற்ற படங்களில் வில்லனாகவோ, மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும். ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் அவரது 50வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில், நீங்கள் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் சேதுபதி “தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன். காதல் படங்களில் நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் சேதுபதி “தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான். கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன். அது எல்லாதுக்கும் அமைந்துடாதுல்ல சார்” என்றார்.