Monday, November 18, 2024

நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போராடுவேன் – நிவின் பாலி !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த சில நாட்களாக மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளாகவும், காவல்துறையில் புகார்களாகவும் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில், இளம் முன்னணி நடிகர் நிவின்பாலிக்கு எதிராகவும் ஒரு இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து, நடிகர் நிவின்பாலி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இதுபற்றி காவல்துறையினர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, என் தரப்பில் இருந்து நான் அளித்த விளக்கங்கள் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருந்தது. இந்த குற்றச்சாட்டு என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த வேதனை போலவே நானும் வேதனை அடைந்துள்ளேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போராடி தீர வேண்டும். என்னை நிரபராதி என நிரூபிக்க, சட்டரீதியாக எந்த எல்லைக்கும் செல்வேன்” என அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News