நடிகை அடா சர்மா தீவிர ரசிகர் ஒருவர் ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியத்தை வரைந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். சன் பிளவர் 2 வெப் சீரிஸில் அவர் நடித்த ரோஸி என்கிற கதாபாத்திரத்தை தான் அந்த ரசிகர் ஓவியமாக வரைந்து உள்ளார். ரசிகர் வரைந்த இந்த ஓவியம் குறித்து அடா சர்மா கூறும்போது, “என்னுடைய படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்களை மக்கள் இந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். அந்த ரசிகரின் ஓவியத்தை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அதேசமயம் எனக்காக இப்படி ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை பயன்படுத்தி ஓவியம் வரைவது போன்று செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
