96″ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் “மெய்யழகன்” படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

“டீசர்” என்பது ஆங்கில சொல், அதற்கு தமிழில் “கிளர்வோட்டம்” என்று பெயர் வைத்துள்ளனர், மற்றும் இதை அவர்களது போஸ்டர்களிலும் குறிப்பிட்டுள்ளனர், படத்தின் வெளியீட்டு தேதியை தமிழ் மாத கணக்குப்படி “புரட்டாசி 11” வெளியீடு என்றும் டீசரின் கடைசியில் சேர்த்துள்ளனர்.

டீசர், டிரைலர், போஸ்டர், பர்ஸ்ட் லுக், வியூஸ், பர்ஸ்ட் சிங்கிள் போன்ற பல ஆங்கில வார்த்தைகள் தமிழ் சினிமா விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. “பர்ஸ்ட் லுக்” என்பதற்கு “முதல் பார்வை”, “வியூஸ்” என்பதற்கு “பார்வை” என்ற பொருத்தமான வார்த்தைகள் மட்டுமே பழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.