Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் VFX பணிகள் ஆரம்பம்.. தொடர்ந்து அப்டேட் கொடுத்து அசத்தும் அர்ச்சனா கல்பாத்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் மகன் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ள நிலையில், இதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். இந்நிலையில், இன்னும் சில நாட்களுக்கு தேவையான ஷூட்டிங் சென்னையில் மீண்டும் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின், மீதமுள்ள 50% டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த அறிவிப்பை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.மேலும், இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படக்குழுவினர் அடுத்தடுத்த பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News