நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படம், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் விளம்பரப் பணிகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டுமின்றி, படம் பல்வேறு நாடுகளில் 5000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இந்த திரைப்படம் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, சுமார் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், தமிழ்த் திரையுலகில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேநிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியால் மறைந்த நடிகர் விஜயகாந்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “தி கோட்” படத்தில் விஜயகாந்தின் தோற்றம் குறித்து ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.