நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவரது ரசிகர்கள் அவரை வருங்கால முதல்வராக சித்தரித்து பிரமாண்டமான போஸ்டர்களை ஒட்டி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்திருக்கும் கோட் படம் திரைக்கு வர தயாராகி வருவதால் பல ஊர்களில் இப்படத்தின் போஸ்டரில் தமிழக வெற்றி கழகத்தின் பெயரையும் அச்சிட்டு வருகிறார்கள். இந்த தகவல் விஜய்யின் கவனத்திற்கு வந்ததை அடுத்து ரசிகர்களுக்கு ஒரு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், கோட் படத்திற்காக ரசிகர் மன்றங்கள் வெளியிடும் போஸ்டர்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை எக்காரணம் கொண்டும் அச்சிடக் கூடாது என்று ரசிகர் மன்றங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார் விஜய். சினிமா வேறு, அரசியல் வேறு… இரண்டையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் என்பதற்காகவே இப்படி ஒரு உத்தரவை விஜய் போட்டுள்ளார்.
மேலும் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நாடு திருச்சி, பொன்மலை ஜி கார்னரில், நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.