தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிற பூஜா ஹெக்டே, தற்போது சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேலும், விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்.இந்திப் படத்தில், நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு, ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 4’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன்பு, அவர் ஸ்ரீ காளகஸ்தி சிவன் கோவிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் வழிபாடுகள் செய்துள்ளார்.