தமிழ், தெலுங்கு முன்னணி நடிகை சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் நடிக்கிறார். மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
அவரது கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. சமீபத்தில், கோவை, ஈஷா மையத்தில் தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனுடன், ‛‛நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்பவர்களை கண்டால் அது பாக்கியம். ஞானம் பெற நீங்கள் தான் இந்த உலகில் அதை தேட வேண்டும். உங்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்படுவதால் ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் சமந்தா.