Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தள்ளி போன ராயன் ரிலீஸ்… ஜூலை‌ 26ல் வெளியாகும் என அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தனுஷின் 50வது திரைப்படம் ராயன்‌.இப்படத்தை தனுஷ் இயக்கி, நடித்துள்ளார். இது தனுஷின் 50வது படமாகும். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இது கேங் ஸ்டார் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ராயன் படத்தை தொடர்ந்து மற்றொருபுறம் பிரபலமான தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ராயன் மற்றும் குபேரா என இரண்டு படங்களிலும் பிஸியாக வலம் வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.இம்மாதம் ஜூன் 13ல் படம் ரிலீஸ் என முன்பு அறிவித்தனர்.

ஆனால் பட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் முடியாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது அதேபோல் ராயன் திரைப்படம் ஜூலை 26க்கு ரிலீஸை தள்ளி வைத்து புதிய போஸ்டர் உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News