Tuesday, November 19, 2024

தள்ளிப்போன கங்குவா ரிலீஸ்… சூப்பர் ஸ்டார் அவர்களுடைய படம் வருவதுதான் சரியாக இருக்கும்… நடிகர் சூர்யா எமோஷனல் பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம்தான் மெய்யழகன். இது கார்த்தியின் 27-வது படம் ஆகும். இந்தப் படத்தை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் மிகப்பெரும் விமரிசையாக நடைபெற்றது. 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடினமாக உழைத்து உருவாக்கிய திரைப்படம். படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அன்றைய தினம், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிய, தமிழ் சினிமாவின் அடையாளமாக 50 ஆண்டுகளாக இருப்பவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் வெளியிடப்படுகிறது. எனவே, சூப்பர் ஸ்டார் படம் வருவது தான் சரியாக இருக்கும்.

கங்குவா ஒரு குழந்தை போன்றது. அது எப்போது வெளியிடப்படுகிறதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அந்த நாளை நீங்கள் கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார். பின்னர் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகாத நிலையில், புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News