நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றின்பொது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்துள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பே, நடிகர் சிவகார்த்திகேயன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைச் சந்தித்த புகைப்படங்களை தயாநிதி மாறனே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தயாநிதி மாறன் அந்த பதிவில், மிகவும் எளிமையான, இயல்பான மற்றும் அன்பான சிவகார்த்திகேயனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பலரும், சிவகார்த்திகேயன் அரசியலில் இணைவாரா? என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், சிவகார்த்திகேயன் கலாநிதி மாறனைச் சந்தித்திருப்பது அடுத்த படத்தின் பேச்சுவார்த்தைக்காகவா? என்று கூறப்பட்டாலும், சிவகார்த்திகேயன் நேரடியாக முதல்வர் Snapchat மற்றும், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சந்தித்திருப்பது பேச்சு பொருளாகி உள்ளது.