தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், கார் பந்தயத்திற்கும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில், அவருடைய அணி போட்டியில் கலந்து கொண்டது.
பந்தயத்திற்கு முன் நடந்த பயிற்சி செஷனில், அஜித் குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, அவர் போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவருடைய அணி போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு, இறுதியில் 3வது இடத்தைப் பெற்றது. இந்த வெற்றிக்கு, திரைத்துறையைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், மணிக்கு 270 கி.மீ வேகத்தில் தனது காரை இயக்கி, 1.17 நிமிடங்களில் இலக்கை எட்டியதன் மூலம், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார் அஜித் குமார். இதற்கு முன்பு, அவர் 210 கி.மீ வேகத்தில் காரை இயக்கி, 1.51 நிமிடங்களில் இலக்கை எட்டியிருந்தார்.