Tuesday, November 19, 2024

தங்கலான் பட ரிலீஸூக்கு வந்த சிறு சிக்கல்… #Thabgalaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞானவேல்ராஜா மற்றும் அவரது தந்தையார் எடுத்த கடன் தொகை மீதமுள்ள காரணமாக ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் பெற்றிருந்தனர்.பைனான்சியர் தரப்பில், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகும் அவர்கள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால், அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கின் விசாரணை நடந்து, இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியும், ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக மற்றொரு கோடியும் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் 1 கோடி டெபாசிட் செய்தால் மட்டுமே ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.

- Advertisement -

Read more

Local News