2023 ஆம் ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் கேமியோ ரோல்களில் நடித்தனர். இரண்டாம் பாகத்தில் இவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தனுஷ் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது..
